கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு நோக்கி செல்லும் சாலையில், நந்திவரம் மலைமேடு அருகே சாலையின் நடுவே எல்லை தூண் கட்டப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அந்த எல்லை தூண் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையின் நடுவே உள்ள எல்லை தூணை அகற்றி விபத்துக்களை தவிர்க்க வழி வகுக்க வேண்டும்.