திருவள்ளூர் மாவட்டம் ஆவடி போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் அம்மா உணவக கட்டிடத்தின் பின்புறம் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசு, புழுக்கள் போன்றவை உருவாகி இந்த கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனருகில் மசூதி, பள்ளிக்கூடம், பால்வாடி, போலீஸ் அலுவலகம் ஆகியவை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுநரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.