கே.வி.குப்பம் தாலுகா, லத்தேரியை அடுத்த ராமாபுரம் கிராமத்தில் கெங்கை அம்மன் கோவில் அருகில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் கம்பங்கள் மீது இருந்த சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து இரும்புக் கம்பிகள், துரு ஏறிய நிலையில் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் எப்போது ஒடிந்து விழுமோ? என்ற ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள் உள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன் புதிய கம்பங்களை அமைக்க வேண்டும்.
-கோபாலன், கே.வி.குப்பம்.