காட்பாடி-சித்தூர் நெடுஞ்சாலையில் வள்ளிமலை கூட்ரோடு பகுதியில் இருந்து செங்குட்டை விநாயகர் கோவில் பகுதி வரை 10 மின் கம்பங்களில் 20 விளக்குகள் எரியாமல் உள்ளன. இந்தப் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால், விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஆகிறது. மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- பி.துரை, கல்புதூர்.