மின் விளக்கு வசதி வேண்டும்

Update: 2022-07-25 14:41 GMT

மின் விளக்கு வசதி வேண்டும்

திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்ட சோளிபாளையம் பொதிகை நகர் அருகே மெயின் ரோடு அபாயகரமாக திரும்பும் வளைவு பகுதியாக உள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள், வண்டி வாகனங்கள் வேகமாக செல்வதால் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் மின்கம்பம் இருந்தும் கடந்த ஒரு வாரமாக மின்விளக்கு எரிவதில்லை. நெடுஞ்சாலை நிர்வாகம் அபாயகரமான வளைவு என்று ஒளிரும் வசதி உள்ள எச்சரிக்கை பெயர் பலகை வைக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் வளைவு பகுதியில் உள்ள தெரு விளக்கை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ந. தெய்வராஜ்,சோளிபாளையம். 94423 72611

மேலும் செய்திகள்