ஒளிராத தெருவிளக்கு
திருமுருகன் பூண்டி நகராட்சி ராக்கியாபாளையம் பகுதி குண்ணாங்கல்காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 2 மாதங்களாக தெருவிளக்கு எரிவதில்லை. இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள் நடமாட மிகவும் அச்சப்படுகிறார்கள். அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கும் வாய்ப்பாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
அருணாசலம். ராக்கியாபாளையம் 94421 47279