ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் மேட்டுத்தெரு பகுதியில் தெருவிளக்குகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படும் பெட்டி உள்ள மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. இரும்புக்கம்பிகள் துருப்பிடித்த நிலையில் வெளியே தெரிகின்றன. மழைக் காலங்களில் மின் கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. அந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நட்டு, பாதுகாப்பான பெட்டி அமைத்துத் தர சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.