மின்கம்பம் சேதம்

Update: 2024-09-15 11:46 GMT

போளூர் தாலுகா செம்பியமங்கலம் கிராம ஏரிக்கரையின் மீது அமைந்துள்ள சாலையையொட்டி வயல்வெளியில் பழமை வாய்ந்த வீரபத்திரர் கோவில் உள்ளது. அதன் அருகே ஒரு மின் கம்பம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த மின் கம்பத்தில் இருக்கும் சிமெண்டு பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பலமாக காற்று அடித்தால் மின் கம்பம் முறிந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படும். எனவே மின் விபத்து ஏற்படும் முன், மின் கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக் க வேண்டும்.

-டி.ஜெ. குமார், சமூக ஆர்வலர், போளூர். 

மேலும் செய்திகள்