ரத்தினகிரி-ஆற்காடு சாலையில் ரத்தினகிரி மருத்துவமனை அருகில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. சற்று சாய்ந்தும் உள்ளது. கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைப்பார்களா?
-கே.குமாரசாமி, ரத்தினகிரி.