வேலூர் மாவட்டம் சி்.எம்.சி. மருத்துவமனை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் முன்னறிவிப்பின்றி சுமார் ஒரு மணி, அரை மணி நேரம் திடீர் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் டீக்கடை மற்றும் ஜூஸ் கடை வியாபாரிகளின் அன்றாட வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மின்சாரம் துண்டிப்புக்கு முன் மின்வாரியத்துறை அறிவிப்பு வெளியிட்டால் மிக நன்றாக இருக்கும். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்களா?
-விஷ்ணுதாசன், வேலூர்.