காட்பாடி பகுதியில் செங்குட்டை, கல்புதூர் உள்ளிட்ட பல இடங்களில் தினமும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சில நாட்களில் மின்தடை பல மணி நேரம் நீடிக்கிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். மின் பகிர்மான கழகத்தில் இருந்து உங்கள் பகுதியான காட்பாடி நகர்ப்புறத்தில் மின் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சரி செய்யப்படும் நேரம் குறித்தும் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. ஆனால், உரிய நேரத்தில் பெரும்பாலான நாட்களில் சரி செய்யப்படுவதில்லை. எனவே காட்பாடி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.துரை, கல்புதூர்.