பொதுமக்கள் அவதி
திருப்பூர் மிலிட்டரி காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. அதே போல் சூசையாபுரம் விரிவிலும் எந்த பணியும் நடக்க வில்லை. சாலையில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் நடமாட மிகவும் அச்சப்படும் நிலை உள்ளது. அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் சுகாதார நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி மேயர் இந்த ஏரியாவில் ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
ரவி, திருப்பூர் 9843059791
---