திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோடு அருகே ெரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் பாதி தூரம் உள்ள மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். இதனால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் எரியாத மின்விளக்குகளை சரி செய்து எரியவிட வேண்டும்.
-எஸ்.ராஜேஷ், திருப்பத்தூர்.