அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழப்பழுவூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரியலூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருமழபாடி பிரிவு பகுதியில் உள்ள தெருவிளக்குகள் பல நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.