குமராட்சி அடுத்த முள்ளங்குடி கிராமத்தில் விவசாய பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி பழுதடைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இதனால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமலும் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனா். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து மின்மாற்றியை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.