தர்மபுரி பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்திற்கு இடையே அமைந்துள்ள குமாரசாமிபேட்டை ரெயில்வே மேம்பாலம் வழியாக தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகளில் பெரும்பாலானவை பழுதடைந்து உள்ளன. எரியும் சில மின் விளக்குகளும் போதிய வெளிச்சமின்றி மங்கலாக உள்ளன. இதனால் இரவு நேரங்களில் இந்த மேம்பாலத்தில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே இந்த மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சீரமைத்து போதிய வெளிச்சத்தை ஏற்படுத்த துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.