சிவகாசி வட்டம், காரிசேரி ஊராட்சி மத்தியசேனை கிராமம் கிழக்கு தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் அந்த வழியாக கடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைகின்றனர். ் இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் இருப்பதால் அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் உள்ள சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.