இருள் சூழ்ந்த சாலை

Update: 2026-08-02 10:07 GMT

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 19-வது வார்டு கணபதி பகுதியில் தனியார் பள்ளி அருகில் தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் அங்குள்ள சாலைகள் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. அத்துடன் தெருநாய்கள் தொல்லையும் அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக இரவில் செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு பழுதாகி உள்ள தெருவிளக்குகளை உடனடியாக பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்