கோவையை அடுத்த இடிகரை பேரூராட்சி 15-வது வார்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணாக அப்பகுதி பொதுமக்கள் வெளியே நடமாடவே அச்சப்படுகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது அங்குள்ள தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.