ஒளிராத உயர் கோபுர விளக்குகள்

Update: 2026-08-02 07:20 GMT

முன்சிறை சந்திப்பு பகுதி வாகன போக்குவரத்துடம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் காணப்படுகிறது. மேலும், அதனை தொடர்ந்துள்ள 5 மின்கம்பங்களிலும் தெருவிளக்குகள் சீராக ஒளிராமல் உள்ளது. இரவு நேரத்தில் அந்த சந்திப்பில் பஸ்சில் வந்து இறங்கும் பயணிகள் மற்றும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்குள் மற்றும் தெருவிளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகள் பொருத்தி எரிய வைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விக்டர் ராஜ், முன்சிறை.

மேலும் செய்திகள்