காடையாம்பட்டி அடுத்த தும்பிப்பாடி கிராமம் முள்ளிச்செட்டிப்பட்டி பெருமாள் கோவில் அருகே மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. இதனால் இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தபடி உள்ளது. பலத்த காற்று அடித்தால் மின்கம்பம் கீழே விழ வாய்ப்பு உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.