சீரமைக்கப்பட்டது

Update: 2026-07-26 12:32 GMT

ராஜாக்கமங்கலம் சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் கடந்த ஒருமாதமாக ஒளிராமல் காணப்படுகிறது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் சாலையை கடப்பதற்கு பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி தினத்தந்தி ‘புகார்பெட்டி’யில் படத்துடன் செய்தி வௌியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குள் பொருத்தி ஒளிர வைத்துள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

-நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

மேலும் செய்திகள்