பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கருப்பட்டன்குறிச்சி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளன. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்து பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பாக, சாய்ந்துள்ள மின்கம்பங்களைச் சீரமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.