குடிமங்கலம் அருகே பூளவாடி சந்தைப்பேட்டை சுங்ககேட் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தாக காணப்படுகிறது. எந்த நேரத்திலும் சாயும் நிலையில் உள்ளதால், அந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக மன்கம்பம் அருகே செடிகள் மற்றும் புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் அருகே உள்ள மற்றொரு மின்கம்பத்திலும் மின் இணைப்புகள் மற்றும் உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்
ரமேஷ், குடிமங்கலம்.