மதுரை விளாங்குடி முதல் சமயநல்லூர் வரை செல்லும் முக்கிய சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோலார் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது அந்த மின் விளக்குகள் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதுடன் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, பழுதடைந்து உள்ள மின்விளக்குகளை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?