ராசிபுரம் அருகே ஆண்டகலூர் கேட் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இங்குள்ள 4 சாலை சந்திப்பு போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்த வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள். இதனால் ஆண்டகலூர் கேட் பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இதன்காரணமாக அங்குள்ள மேம்பாலத்தின் அருகே இருபுறத்திலும் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ராசிபுரம் சாலையில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் எரிவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மக்கள் நலன் கருதி உயர்கோபுர மின்விளக்கை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.