இருள் சூழ்ந்த கிராமம்

Update: 2026-06-07 09:09 GMT

சூலூர் தாலுகா சுல்தான்பேட்டை ஒன்றியம் வடவள்ளி ஊராட்சி அக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் பழுதாகி கிடக்கின்றன. இதனால் பெரும்பாலான தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. இதன் காரணமாக அந்த கிராமம் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவசர, அத்தியாவசிய தேவைக்காக இரவில் வெளியே சென்று வரும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேலாவது தெருவிளக்கு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்