கோவை மாநகராட்சி 38-வது வார்டுக்கு உட்பட்ட டான்சா நகர் பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக இரவில் ஊருக்குள் புகுந்து அவை அட்டகாசம் செய்கின்றன. இந்த நிலையில் அங்குள்ள தெருவிளக்குகள் நீண்ட நாட்களாக பழுதாகி கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் இரவில் வெளியே நடமாடவே அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.