வீரவநல்லூர் பேரூராட்சி 1-வது வார்டு இந்திராநகரில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியில் நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் அங்கு விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.