'தினத்தந்தி’-க்கு பாராட்டு

Update: 2025-12-28 16:31 GMT

ஆப்பக்கூடலில் இருந்து தளவாய்பேட்டை வழியாக பவானி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஒரிச்சேரி கிராமம் முன்புள்ள சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து சாலையோரம் பெயர் பலகையை மறைத்திருந்த மரக்கிளையை நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி’-க்கும், பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி