சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா வெங்கலூர் பஞ்சாயத்து கீழக்கடியாவயல் கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் இருந்து செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.