கிருஷ்ணகிரி அவதானப்பட்டி ஏரியில் சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு படகு சவாரி வசதி உள்ளது. இந்த ஏரியில் இரும்பினால் ஆன மின் கம்பம் உள்ளது. அந்த கம்பம் தண்ணீரில் மிதந்த நிலையில் உள்ளது. அந்த மின் கம்பம் சாய்ந்தால் மனித உயிர் பலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஏரியில் உள்ள மீன்களும் செத்து மடியும் அபாயமும் உள்ளது. எனவே அந்த மின் கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும்.