கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், நன்செய் புகழூர், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, புன்னம், வேட்டமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் நடப்பட்டு மின்கம்பிகள் பொருத்தப்பட்டு விவசாய மின்மோட்டார்களுக்கும், வீடுகளுக்கும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின்கம்பிகள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்துள்ளது. இதனால் பொதுமக்களும், கால்நடைகளும் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளில் மிதித்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பங்களை சீரமைத்து மின்கம்பிகளுக்கு பதிலாக மின் கேபிள் வயர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.