திண்டுக்கல் நாகல்நகர் திருமலைசாமிபுரம் 2-வது தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து விட்டது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து துருபிடித்த கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்று அல்லது கனமழையின் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் நடமாடுகின்றனர். இந்த மின்கம்பம் மாற்றப்படுமா?