ஆத்தங்கரை பள்ளிவாசல்- ராமன்குடி சாலையில் மின்மாற்றி அருகில் உள்ள மின்கம்பத்தின் உச்சிப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.