உயிரிழப்பு ஏற்படும் அபாயம்

Update: 2025-12-21 14:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா கொப்பனாபட்டி ஊராட்சி கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் நுழைவாயில் அருகில் மின்மாற்றி உள்ளது. இதில் மின்கம்பங்கள் சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இக்கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் நிலையில், தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அய்யப்ப பக்தர்கள் வருகையும் அதிகரித்து உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்