கீரப்பாளையம் அருகே இந்திரா நகர் 2-வது தெருவில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு இரவு வேளைகளில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.