வாடிப்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுகின்றது. இந்த மின்தடையால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் ஏற்படும் தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.