பொதுமக்கள் அச்சம்

Update: 2025-12-14 15:07 GMT

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் சாலை ராஜீவ் காந்தி நகர் 10 மற்றும் 11-வது தென்வடல் தெருவில் உள்ள சில உயர் மின்கம்பிகள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் பலத்த காற்று வீசும்போது அப்பகுதியில் மின்வினியோகம் பாதிக்கப்படுகிறது.எனவே சம்பந்த்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்