தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பத்திர அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பூச்சூர் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தெரு விளக்குகள் அனைத்தும் இரவில் எரிவது மட்டுமில்லாமல், பகலிலும் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் இரவில் மட்டும் தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.