ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-12-14 10:01 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குழிக்கடவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கிறது. ஆனால் தெருவிளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கிறது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் அந்த பகுதியும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு வசித்து வரும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருவிளக்குகளை பழுது நீக்க அல்லது புதிதாக பொருத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்