இடையூறு ஏற்படுத்தும் மின்மாற்றி

Update: 2025-12-07 16:30 GMT

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில் குடியிருப்பு பகுதியில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றியானது பொதுமக்களுக்கும், விழா காலங்களில் திருவிழா நடத்துவதற்கும் இடையூறாக அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த மின்மாற்றியின் அருகே இரண்டு தென்னை மரங்கள் உள்ளதால் மழைக்காலங்களில் இப்பகுதியில் இடி விழும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதியில் உள்ள மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்