குஜிலியம்பாறை தாலுகா வடுகம்பாடியில் தளிப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்ட மின்விளக்கு பகலில் எரிகிறது. மேலும் அதற்கு மின்இணைப்பு கொடுக்கும் மின்சார மீட்டர் அடங்கிய பெட்டியும் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. எனவே மின்விபத்து ஏற்படுவதற்கு முன்பு மின்சார மீட்டர் பொருத்தப்பட்ட பெட்டியை சீரமைப்பதுடன், பகலில் மின்விளக்கு எரியாமல் இருக்கவும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.