காவேரிப்பட்டணம் அருகே குண்டலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது குரும்பட்டி கிராமம். இங்கு செல்லியம்மாள் கோவில் எதிரில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது. டிரான்ஸ்பார்மர் எந்த நேரமும் விழும் ஆபத்து உள்ளது. எனவே மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக அதை கவனித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.