சென்னை மாநகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சண்முகபுரம் 4-வதுதெருவில் உள்ள ஒரு மின்கம்பம் சிதிலமடைந்து உள்ளது. குடியிருப்பின் அருகே உள்ள இந்த கம்பத்தால் மின்விபத்து அபாயம் அப்பகுதி மக்களிடையே தொற்றியுள்ளது. ஒட்டுப்போட்டு வைத்தது போல காட்சியளிக்கும் இந்த எலும்புகூடான மின்கம்பத்தை மாற்றியமைக்க மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.