ஓமலூர் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி 10-வது வார்டு தே.கொல்லப்பட்டி ஒண்டிவீரன் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள அருந்ததியர் தெருவில் மின்வாரியம் நிர்வாகம் தெரு ஓரம் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் இந்த மின்கம்பம் எப்போது விழுமோ? என்ற நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
-இளங்கோவன், ஓமலூர்.