மின்விளக்குகள் வேண்டும்

Update: 2025-11-16 13:31 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே கல்லணை கால்வாய் செல்கிறது. முத்துப்பேட்டை சாலையில் இருந்து மதுக்கூர் செல்லும் கல்லணை கால்வாய் ஆற்றங்கரை சாலையில் தெருவிளக்குகள் இல்லை. இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். மின்விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்