சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் வெளியாந்தூர் ஊராட்சி வடக்கு தெரு கோட்டைகிடக்கு ஊருணி அருகில் உள்ள பொதுகுளியல் தொட்டி மின் மோட்டார் சுவிட்ச் பெட்டி, கதவுகள் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த பெட்டி தாழ்வாக அமைந்து இருப்பதால் குழந்தைகள் இதனை தொடுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் விபத்து ஏற்படுவதை தடுக்க பெட்டிக்கு கதவு அமைத்து தருவதோடு பெட்டியை சற்று உயரமாக அமைக்க வேண்டும்.