வடமதுரையை அடுத்த அய்யலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்துவிழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை விரைந்து அகற்ற வேண்டும்.