சாலை நடுவே மின்கம்பம்

Update: 2025-11-09 12:20 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள அச்சனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னையன் கொட்டாய் தெரு உள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவிற்கு, சமீபத்தில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையின் நடுவே மின் கம்பம் உள்ளது. இதனால் இந்த தெருவுக்குள் கார், டிராக்டர், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியாமல், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

-தியாகு, அச்சம்பட்டி.

மேலும் செய்திகள்